கர்நாடக முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 05-03-2024 03:27:41pm
கர்நாடக முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்

கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் டிகே சிவக்குமார் மற்றும் உயர் அதிகாரிகளை குறிவைத்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஷாகித் கான் என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் மெயில் வந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடிகுண்டு வெடித்தது.

 

Tags :

Share via