கழிவறை கட்டுவதில் கூட ஊழல் - எச். ராஜா குற்றச்சாட்டு!

கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா, சென்னையில் டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடந்த அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் உள்ள சாராய ஆலைகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோது, கரூர் கும்பல் குவார்ட்டருக்கு ரூ. 10, புல் பாட்டிலுக்கு ரூ. 40 என வசூல் செய்ததாகப் பேசப்பட்டது. அவர்கள் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலையை விட அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் முறைகேடாக சாராய வியாபாரம் நடந்துள்ளதாகவும் உறுதியாகியுள்ளது. இந்த ஊழல் ஆயிரம் கோடி என்பது ஒரு சிறிய பகுதிதான் என்றும், முழு விசாரணைக்குப் பிறகே எத்தனை கோடி என தெரியவரும் என்றும், திமுக ஆட்சியில் கழிப்பறை கட்டுவதில் கூட ஊழல் நடந்துள்ளது என்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
Tags :