வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் வெட்டப்பட்ட மரம் - பாரம்பரிய கட்டிடத்தில் விழுந்து சேதம்.

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் வருகின்ற 7-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது கோவிலில் புனரமைப்பு பணி என்பது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கோயில் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தை ஊழியர்கள் இன்றைய தினம் வெட்டிய நிலையில், அந்த மரமானது விழுந்து வரலாற்று சிறப்புமிக்க பைரவர் கோவில் மண்டபத்தின் மீது விழுந்து அந்த மண்டபத்தின் ஒரு பகுதி லேசான சேதமடைந்தது.
அதனை தொடர்ந்து, அங்கு இருந்த பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினையில் ஈடுபட்ட நிலையில் நாளைய தினமே அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது.கும்பாபிஷகத்திற்கு 19நாட்களே உள்ள நிலையில் இந்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.
Tags : வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் வெட்டப்பட்ட மரம் - பாரம்பரிய கட்டிடத்தில் விழுந்து சேதம்.