ஈரோடு தொகுதியில் இளங்கோவன் பெற்ற வாக்குகளை விட திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

by Editor / 09-02-2025 09:37:00am
ஈரோடு தொகுதியில் இளங்கோவன் பெற்ற வாக்குகளை விட திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஈரோடு இடைத்தேர்தலில் திராணியற்ற எடப்பாடி பழனிச்சாமியும், பாஜகவும் போட்டியிடவில்லை என்று கூறிய நிலையில், தந்தை பெரியார் பற்றி வாய்க்கு வந்ததை பற்றி பேசிவிட்டு சில வாக்குகளை பெற வேண்டும் என்ற ஓரவஞ்சனையில் நாம் தமிழர் கட்சியினர் போட்டியிட்டு டெபாசிட் இழந்துள்ளனர். ஆனால், ஈரோடு தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ இளங்கோவன் பெற்ற வாக்குகளை விட தற்போதைய திமுக வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது தளபதிக்கு கிடைத்த வெற்றி..,

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என கூறி வரும் தமிழக பாஜகவினர்  தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதி பற்றி வாயை திறக்கவில்லை. தமிழ்நாடு அமைதியாக இருக்கின்றது, எந்த வகையிலாவது  ஜாதி, மதத்தை தூண்டும் வகையில் குழப்பத்தை ஏற்படுத்தி விடலாமா? என்று பாஜக கனவு காண்கிறது. ஆனால், தமிழகத்தில் திமுகவை கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. இந்த கூட்டணி 2026 தேர்தலில் 200 தொகுதி மட்டுமல்ல, 234 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி பெறும் நிலை உருவாகும் என்றார்..

 

 

Tags : ஈரோடு தொகுதியில் இளங்கோவன் பெற்ற வாக்குகளை விட திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Share via