ஷின்சோ அபே மறைவுக்கு இந்திய ஒருநாள் தேசிய துக்கம் கடைபிடிப்போம்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி அவரின் மறைவுக்கு இந்தியாவில் ஒருநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். ஷின்சோஅபே வின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஷின்சோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விட்டனர் இன்று ஒருநாள் தேசிய துக்கம் கடைப்பிடிக்க படுவதால் அரசு விழாக்கள்எதுவும் நடைபெறாது.
Tags :