ரயில்வே வேலைக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம் தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரயில்வே துறையில் வேலை பார்க்க பணியாளர்கள் அதிகாரப்பூர்வ ரயில்வே பணியாளர் தேர்வு நிறுவனங்கள் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு இடைத்தரகர்கள் யாரும் கிடையாது. அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெற்கு ரயில்வே அறிவிக்கிறது. யாராவது ரயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன் என பணம் கேட்டால் தெற்கு ரயில்வே ஊழல் தடுப்பு பிரிவு அலைபேசி எண் 9003160022 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யவும். தமிழக காவல்துறையினரிடமும் புகார் செய்யலாம். சமீபத்தில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த இருவரை சென்னை வடபழனியில் தமிழக காவல்துறை மற்றும் தெற்கு ரயில்வே ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Tags :