பூர்வாஞ்சல்  சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்

by Admin / 16-11-2021 06:45:26pm
பூர்வாஞ்சல்  சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்

 

பூர்வாஞ்சல்  சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்...

உத்தரபிரதேச மாநிலத்தில் பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் பிரதமர் மோடி இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் தரையிறக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது.
 
உத்தர பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களை இணைக்கும் வகையில் 22 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் 341 கிலோமீட்டர் தொலைவுக்கு பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுல்தான்பூர் பகுதியில் 3.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு விமான ஓடுபாதை அமைக்கப்பட்டிருக்கிறது.

, விமானப் படையின் சி130ஜே ஹெர்குலிஸ் சரக்கு விமானத்தில் பயணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் இன்று தரையிறங்கி திறந்து வைக்கிறார்.

 பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படையின் விமானம் தரையிறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் பிரத்தியேக வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 

லக்னோ-சுல்தான்பூர் தேசிய நெடுஞ்சாலை எண் 731-ல் அமைந்துள்ள இந்த நெடுஞ்சாலை சவுதுசாராய் கிராமத்தில் இருந்து ஆரம்பமாகி, உத்தர பிரதேசம் - பீகார் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள ஹைடாரியா கிராமத்தில் முடிவடைகிறது.

6 வழிச்சாலையாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலையானது வருங்காலங்களில் 8 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதியம்  சி130ஜே ஹெர்குலிஸ் சரக்கு விமானத்தில் தரையிறங்கும் பிரதமர் மோடி பின்னர் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.


 இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000, AN-32 போக்குவரத்து விமானம், 2 சுகோய் 30 ஜெட் விமானங்கள், 3 கிரண் Mk2 விமானங்கள் ஆகியவை தரையிறங்கும் ஒத்திகை காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.

 

Tags :

Share via