தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கத்தைச் சார்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தின் முன்பாக தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கத்தைச் சார்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை காவல்துறைக்கு எதிராக செய்தனர். பட்டுக்கோட்டை ரோஜா நகை கடை உரிமையாளர் ராஜசேகர் என்பவர் கடந்த மாதம் திருட்டு நகைகளை வாங்கியதாக திருச்சி கே. கே. நகர், காவல் உதவி ஆய்வாளர் உமா சங்கரி ராஜசேகரையும் அவரது மனைவியையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று அவமானப்படுத்தியதன் காரணமாக, அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந் நிகழ்வைத் தொடர்ந்து திருச்சி காவல்துறை ஆணையர், உமா சங்கரியை காத்திருப்போர் பட்டியலில் வைத்தார். ராஜசேகர்னுடைய மரணத்திற்கு காரணமான உமா சங்கரி பதவி நீக்கம் செய்வதோடு, உயிரை மாய்த்துக் கொண்ட ராஜசேகரனுடைய குடும்பத்திற்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களோடு இனிமேலும் தமிழ்நாட்டில் நகை கடை உரிமையாளர்கள் மீதும் நகை பட்டறைகளை நடத்தி வருபவர்களிடம் திருட்டு நகை வாங்கியதாக பொய் வழக்கு பதிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேரளா ,கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் பொற்கொல்லர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு போல் தமிழ்நாட்டிலும் நகை தொழில் செய்யும் கைவினை கலைஞர்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
Tags :