கணவரை இழந்த பெண்ணுக்கு அதிமுக வட்ட செயலாளர் கைது.
சென்னையில் கணவரை இழந்த பெண்ணுக்கு அதிமுக வட்ட செயலாளர் போனில் ஆபாச தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த அதிமுக தாம்பரம் மாநகராட்சி 53-வது வார்டு வட்ட செயலாளர் குமணன் (47) என்பவர் தனது வீட்டின் அருகே கணவரை பிரிந்து வாழும் இளம்பெண்ணுக்கு செல்போன் மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக வட்ட செயலாளர் குமணனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :