மூன்று ஆண்டுகளுக்கு பிறகு குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று தொடங்கியது.

by Editor / 06-08-2022 05:25:00pm
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று தொடங்கியது.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று தொடங்கியது.

 இதற்கான அழைப்பிதழ் இதுவரை இல்லாத அளவு பிரமாண்டமாக வண்ணமயமாக தயாரிக்கப்பட்டுள்ளது .

ஆனால் இதில் முதல்வர் படம் இடம்பெறவில்லை. அழைப்பிதழ் அச்சாகி வந்த பிறகே  இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது.

 இது மாவட்ட நிர்வாகத்திற்கும் செய்தி மக்கள் தொடர்பு  துறைக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் படத்தைக் கூட போடாமல் என்ன அழைப்பிதழ்.என முகம் சுழிக்க வைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.இதனை முக்கியமாக யாரும் கவனிக்கவில்லையாம் இரவோடஇரவாக முதல்வர் மற்றும் கலைஞர் பட ஸ்டிக்கர்கள் தனியே தயாரித்து ஒட்டப்பட்டு அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக  ஆயிரக்கணக்கான அழைப்பிதழ்கள்  வினியோகம் செய்யப்படாமல் ஓரம் கட்டப்பட்டதாகவும் ஒரு தகவல்.

Tags :

Share via

More stories

Logo