உடைந்து விழுந்த கோயில் படி கிணறு.. 11பேர் பலி

by Staff / 30-03-2023 05:20:59pm
உடைந்து விழுந்த கோயில் படி கிணறு.. 11பேர் பலி

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கோவில் கிணற்றில் விழுந்த பக்தர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் அமைந்துள்ள கோவிலில் ராமநவமி கொண்டாட்டத்தில் படிக்கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கிணறு இடிந்து விழுந்ததில் 25க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, 11 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மீட்கும் பணியில் தீயணைப்பு படை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories