அமெரிக்கா சுற்றுலா விசா பெறுவதற்கு 2024 வரை காத்திருக்க வேண்டும்

by Editor / 19-08-2022 02:17:54pm
அமெரிக்கா சுற்றுலா விசா பெறுவதற்கு 2024 வரை காத்திருக்க வேண்டும்

அமெரிக்கா செல்ல திட்டமிடுபவர்கள் இன்றைய நாளில் விண்ணப்பித்தால் சுற்றுலா விசாவுக்கான நேர்காணல் அழைப்பு கிடைக்கப்பெற 2024 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதில் அமெரிக்கா சுற்றுலா விசா நேர்காணலுக்கான சராசரி காத்திருப்பு காலம் தற்போது சென்னைக்கு 557 நாட்களாகவும் டெல்லிக்கு 581 நாட்களாகவும் மும்பைக்கு 517 நாட்களாக உள்ளன. அதே சமயம் மாணவர் சுற்றுலா விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் சென்னைக்கு 8 நாட்களாக உள்ள நிலையில் டெல்லிக்கு 479 நாட்களாகவும் மும்பைக்கு பத்து நாட்களாகும் உள்ளன. குறிப்பாக கனடா பிரிட்டன் ஐரோப்பிய நாடுகளுக்கான விசா பரிசிலனை காலம் மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories