மாணவி பாலியல் வன்கொடுமை:நடைபாதை பிரியாணி கடை வியாபாரி கைது.
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் எனத் தெரியவந்துள்ளது. அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்ததாக போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கைதான ஞானசேகரன் வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : மாணவி பாலியல் வன்கொடுமை:நடைபாதை பிரியாணி கடை வியாபாரி கைது.