முழு ஊரடங்கை அமல்படுத்தவேண்டும்- விஜயகாந்த்
தமிழகத்தில் தொடர்ச்சியாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ”முழு ஊரடங்கை அமல்படுத்தவேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்திருக்கிறார்.அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ”நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை என்று வெளியாகும் செய்தி வேதனையளிக்கிறது. கொரோனாவிற்கு போதிய சிகிச்சையின்றி நாள்தோறும் பல உயிர்கள் பலியாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது.இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஆங்காங்கே முகாம்கள் அமைத்து,18 வயதிலிருந்து அனைவருக்குமே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மாநில, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதோடு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ”முழு ஊரடங்கை அமல்படுத்தவேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்திருக்கிறார்.
அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ”நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை என்று வெளியாகும் செய்தி வேதனையளிக்கிறது. கொரோனாவிற்கு போதிய சிகிச்சையின்றி நாள்தோறும் பல உயிர்கள் பலியாகி வருவது அதிர்ச்சியளிக்கிறது.இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஆங்காங்கே முகாம்கள் அமைத்து,18 வயதிலிருந்து அனைவருக்குமே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மாநில, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதோடு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :