உச்ச நீதிமன்றத்தில் பாஜக சார்பில் ரிட் மனு

ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பாஜக சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழக கோவில்களில் நேரலையில் ஒளிபரப்ப அனுமதி மறுப்பு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பாஜக சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே திமுக அரசு இந்து சமய அறநிலையத்துறை தவறாக பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
Tags :