கொளத்தூரில் முதல்வரின் எம்எல்ஏ அலுவலம் முற்றுகை
மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களை விரைந்து நிரப்பக்கோரி சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், எம்எல்ஏ அலுவலகத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டனர். எம்எல்ஏ அலுவலகத்திற்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்பு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், எம்எல்ஏ அலுவலகம் முன்பு குவிந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படடுள்ளது. மேலும், கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தியதால் 4 பேர் மயக்கம் அடைந்தனர்.
Tags :



















