இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆனார் தமிழகத்தின் குகேஷ்

by Staff / 01-09-2023 12:20:38pm
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆனார் தமிழகத்தின் குகேஷ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், இந்தியாவின் நம்பர் 1 இடத்தைப் பிடித்து, விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளியுள்ளார். சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ள பட்டியலில், சர்வதேச அளவில் 2 ஆயிரத்து 758 புள்ளிகளுடன் 8வது இடத்தில் குகேஷ் உள்ளார். இந்த நிலையில், இந்திய அளவில் பார்க்கும் போது முதலிடத்தில் உள்ளார். இதன் மூலம் கடந்த 37 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகக் கோப்பை தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா 19வது இடத்திலும் உள்ளார்.இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆனார் தமிழகத்தின் குகேஷ்

 

Tags :

Share via