காதலனை எட்டி உதைத்த இளம்பெண்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல வீதி அருகே ஷாப்பிங் மால் ஒன்று உள்ளது. இங்கு இளம்பெண் ஒருவர் தன் தாயுடன் வந்திருந்தார். அப்போது, அவர் அங்கு மது போதையில் குடித்துவிட்டு வந்த தனது காதலனை ஆபாச வார்த்தைகளால் திட்டி பொதுமக்கள் முன்னிலையில் வசைபாடினார். அதுமட்டுமின்றி 'தெருவே பார்க்குது' என காதலன் கூறியபோதும் விடாது சண்டையிட்டு அவரை எட்டி உதைத்துள்ளார். பின் அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து விலக்கி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
Tags :













.jpg)

.jpg)

.jpg)

