2026 சட்டமன்றத்தேர்தலாய் கருத்தில் கொண்டு அதிமுகஇணைய வேண்டும்-ஓ.பன்னீர்செல்வம்.

எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தேர்தலை அனைவரும் இணைந்து எதிர்கொண்டால் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்றார். அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்துகிடப்பதை ஒன்றிணைக்கவேண்டுமென்பது தலைவர்களின் கருத்துக்கள் மட்டுமல்ல அனைத்து அடிப்படை ஆரம்பகால தொண்டர்களின் கருத்தாக இருந்துவந்தாலும் இரட்டைஇலை எனும் ஆயுதம் ஒற்றை சின்னமே இன்று தொண்டர்களை கட்டுபாட்டுக்குள் வைத்துள்ளது.இந்தநிலையில் அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்துகிடப்பதை இணைய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் குரல் கொடுத்து வரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்,2026 தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணைய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Tags : 2026 சட்டமன்றத்தேர்தலாய் கருத்தில் கொண்டு அதிமுகஇணைய வேண்டும்-ஓ.பன்னீர்செல்வம்.