கனடா- வட அமெரிக்காவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் 16 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க கோரிக்கை
கனடா- வட அமெரிக்காவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் 16 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிடம் முறைப்படியான கோரிக்கையை வைத்துள்ளது. ஜூலை 1-ஆம் தேதி வரவிருக்கும் ஒப்பந்த மறு ஆய்வுக்கான காலக்கடுவை முன்னிட்டு கனடாவின் வர்த்தக அமைச்சர் டொமினிக் லேப் லாங்க் அதிகாரப்பூர்வமான கடிதத்தை வழங்கி உள்ளார்.
இந்த ஒப்பந்தம் 1994 ஆம் ஆண்டின் நாப்டா ஒப்பந்தத்திற்கு மாற்றாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முந்தைய ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது ஒப்பந்த விதிகளின்படி ஆறு ஆண்டுகள் நிறைவடையும்போது மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தை மேலும் 16 ஆண்டுகளுக்கு நீடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் இது ஆண்டுதோறும் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் தற்காலிக ஒப்பந்தமாக மாறி அது 2036 வரை நீடிக்கப்பட்டு பின் காலாவதி ஆகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வர்த்தக கூட்டமைப்பு மூன்று நாடுகளுக்கும் உலகளாவிய போட்டி நன்மைகளை வழங்குவதால் இதை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என கன்னடா விரும்புவதாக தெரிகிறது வட அமெரிக்காவின் பொருளாதாரம் போட்டித் தன்னை வலுப்படுத்த அமெரிக்க அல்லது மெக்சிகோ கொண்டுவரும் மேம்படுத்தப்பட்ட புதிய பரிந்துரைகளை ஆராய தயாராக இருப்பதாகவும் கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த பொதுப்பித்தனோடு கனடா இரும்பு அலுமினியம் வாகனங்கள் மற்றும் மரக்கட்டைகள் மீது ட்ரம் நிர்வாகம் இணைத்துள்ள குறிப்பிட்ட துறை சார் வரிகளை நீக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேக்சிகோவின் பொருளாதார அமைச்சர் மார்ஷலோ ஏப்ரார்ட் கனடாவின் இந்த 16 ஆண்டு கால நீட்டிப்புக்கு நாடு முழுவதும் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மெக்சிகோ இடையே இருதரப்பு பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அமெரிக்கா வர்த்தக பிரதிநிதி ஜே மிசன் கிரீம் தலைமையிலான குழு வாகன ஏற்றுமதி விதிகள் மற்றும் கனடாவின் பால்வள சந்தை அணுகல் போன்ற விவகாரங்களில் கணிசமான மாற்றங்களை போடுவதால் பேச்சுவார்த்தை சற்று பின்தங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் பொருளாதார மண்ட நிலையை குறிப்பிட்டு அதை அமெரிக்காவில் 51- வது மாகாணமாக மாற்ற வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளார். அதற்கு கனடத் தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் அதிருப்திகள் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது..
Tags :



















