கேரளா கால்நடைகளுக்கு தமிழகத்தில் தடை.

by Editor / 02-08-2023 11:13:26pm
கேரளா கால்நடைகளுக்கு தமிழகத்தில் தடை.

கேரளாவில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது , இதனை தடுக்க கேரளா அரசு பல கட்ட நோய் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகவே கோமாரி நோய் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழக எல்லை குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கால்நடைகளை கொண்டுவருவதை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகிறது. இந்த முகாமினை அமைக்க கால்நடை துறை குமரி மாவட்ட மண்டல இணை இயக்குனர் பாரிவேந்தன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தக்கலை கோட்டம் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எட்வர்ட்தாமஸ், கால்நடை நோய் புலனாய்வு உதவி மருத்துவர் சந்திரசேகர் உதவி மருத்துவர்கள் பிரமோத் டால்பின், பெனடிக்ட், ஆய்வாளர் ராஜீவ், உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மேல்புறம் முஞ்சிறை ஒன்றிய கிராம பகுதிகளில் கோமாரி நோயின் தாக்கம் உள்ளதா? என கண்காணிக்கப்படுகின்றனர்.இந்த முகாம் சுமார் 90 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்-என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via