மாணவி குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

by Staff / 18-08-2023 02:19:13pm
மாணவி குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்துவருகிறார் மகிமைராஜ். சில நாள்களுக்கு முன்பு ஏழுகிணறு பகுதியில் பணியில் இருக்கும்போது, அங்குள்ள ஒரு வீட்டுக்குள் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவியை கைப்பேசி கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்த மாணவி கத்தியதும் மகிமைராஜ் தப்பியோடினார். பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின்பேரில் பூக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via