மேலூர் அருகே விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற மீன்பிடி திருவிழா: 

by Editor / 25-12-2023 09:03:09am
மேலூர் அருகே விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற மீன்பிடி திருவிழா: 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே செம்மணிபட்டியில் உள்ள செம்மணிக்கண்மாயில் பாரம்பரிய முறைப்படி நடைபெறும் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

இந்த மீன்பிடி திருவிழாவில், சுற்றுவட்டார கிராமங்களான கீழவளவு, மலம்பட்டி, கொங்கம்பட்டி, லட்சுமிபுரம், ரங்கசாமிபுரம்  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை பிற மாவட்டங்கள் சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மற்றும் சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துக் கொண்டு, தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, ஊத்தா ஆகியவற்றை பயன்படுத்தி, கிராம பெரியவர்கள் மீன்பிடிக்க அனுமதி அளித்த உடன் கண்மாயில் ஆர்வமுடன் இறங்கி மீன்களை பிடித்தனர்.

இதில் கட்லா, ரோகு, புல்லுகெண்டை, விரால், கொரவை, சிலெபி என பல்வறு வகையான நாட்டுரக மீன்கள் அதிகளவு கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி உடன் அவற்றை பிடித்து சென்றனர். 

மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும், கிராம மக்கள் தங்களுடைய வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டி பாரம்பரிய முறைப்படி இந்த மீன்பிடி திருவிழா நடைபெற்ற நிலையில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் ஒற்றுமையுடன் பங்கேற்றது அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Tags : மேலூர் அருகே விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற மீன்பிடி திருவிழா: 

Share via