பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 5 பேர் கும்பலிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த சிறுமி கவலைக்கிடம்

by Editor / 19-07-2022 03:51:32pm
பாலியல் பலாத்காரம் செய்ய  முயன்ற 5 பேர் கும்பலிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த சிறுமி கவலைக்கிடம்

ஒடிசா மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 5 பேர் கும்பலிடம் இருந்து தப்புவதற்காக பள்ளிக்கூடம் மாடியில் இருந்து குதித்த சிறுமி கவலைக்கிடமாக நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அந்த சிறுமி சகோதரனுடன் சென்றபோது வழியில் கனமழை பெய்துள்ளது .அப்போது 5 பேர் கும்பல் ஒன்று அவரை அருகில் உள்ள பள்ளியில் தங்கி விட்டு மழை விட்டதும் செல்லுமாறு கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் பள்ளிக்கு வந்த அந்த ஐந்து நபர்களும் சகோதரனை அடித்து விரட்டிவிட்டு சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க மாடிக்கு ஓடி சிறுமி அங்கிருந்து கீழே குதித்துள்ளார். சகோதரன் கூச்சலிட்டது கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo