கோயில்கள் சார்பாக உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஓதுக்கிடு!

by Editor / 27-05-2021 01:46:34pm
கோயில்கள் சார்பாக உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஓதுக்கிடு!

கொரோனா நோய் தடுப்புப்பணியில் திருக்கோயில்கள் சார்பாக, ஏழை மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கும் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதையடுத்து, திருக்கோயில்கள் வாயிலாக ஏழை எளிய மக்களுக்கு கடந்த 12 ஆம் தேதி முதல் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில், அடுத்த மாதம் 5ம் தேதி வரை இத்திட்டத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் 349 திருக்கோயில்களில் போதிய நிதி ஆதாரம் இல்லாததை அறிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இத்திட்டத்திற்கு தேவைப்படும் நிதியான சுமார் .2 கோடியே 51 லட்சத்தை இந்து சமய அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து திருக்கோயில்களுக்கு வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via