மாநிலம் தழுவிய போராட்டங்களை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்த உள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் 24 அன்று மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டங்களை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்த உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வீக்ஸிட் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாத இயக்கம் மசோதா திரும்பப் பெறக் கூறி இந்த போராட்டம் நடைபெற உள்ளது. 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். சென்னையில் காலை 10 மணிக்கும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் ஊர்களில் உள்ள கட்சி அலுவலகங்கள் முன்பாகவும் இந்த போராட்டம் நடைபெறும் . இந்த புதிய சட்டம்கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் 100 நாள் வேலை திட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் என்றும் மாநிலங்களில் வேலை வாய்ப்பை மத்திய அரசே தீர்மானிக்கும் நிலையை தவிர்க்க வேண்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் இந்தப் போராட்டத்தை இந்தியா கூட்டணி கட்சி நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
Tags :



















