விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மோதல்.
விழுப்புரம் தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சதீஷ். இவர் பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். விழுப்புரம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் கல்லூரி மாணவர் சதீஷிடம் நேரம் கேட்டுள்ளார்.
அப்போது மது போதையில் இருந்த கல்லூரி மாணவர் சதீஷ், பள்ளி மாணவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. அப்போது கல்லூரி மாணவர் சதீஷ் இரும்பு கம்பியால் பள்ளி மாணவரின் தலையில் தாக்கியுள்ளார்.
அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தவுடன் சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்தனர். இந்நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்த பள்ளி மாணவர் தன்னுடைய அண்ணனை அழைத்து வந்து கல்லூரி மாணவர் சதீஷை கடுமையான தாக்கியுள்ளார்.
அப்போது காவலர்கள் தடுத்தும் கேட்காமல், காவலர்கள் முன்பாகவே சதீஷை கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பள்ளி மாணவரின் அண்ணன் கல்லூரி மாணவர் சதீஷை தாக்கும் வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தலையில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவர் சதீஷ் தரையில் சுருண்டு விழுந்தநிலையில் அவரை 108 ஆம்புலன்ஸ் வாகனம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவர் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மோதல்.