மாணவி பலாத்காரம்; நிர்வாண படங்களை அனுப்பிய பயங்கரம்

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் இத்திதானம் பகுதியைச் சேர்ந்தவர் ஷபின் பிஜு (23). இவர், காதலிப்பது போல் நடித்து அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமியின் அந்தரங்க படங்கள், வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு, தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை சிங்கவனம் காவல் ஆய்வாளர் டி.ஆர். ஜிஜு கைது செய்தார்.குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.
Tags :