புல்வாமாதாக்குதல் வீரர்களின் தைரியமும் தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உந்துசக்தியாக உள்ளது பிரதமர் மோடி

by Admin / 14-02-2022 12:12:14pm
 புல்வாமாதாக்குதல் வீரர்களின் தைரியமும் தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உந்துசக்தியாக உள்ளது பிரதமர் மோடி

புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தைரியமும் தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உந்துசக்தியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா கடந்த  2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பாதுகாப்பு படையினர் வாகனங்களை குறிவைத்து ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.

இதனை நினைவுகூர்ந்துள்ள  பிரதமர் நரேந்திர மோடி வீரர்களின் தைரியமும் தியாகமும் இந்தியாவை வளமானதாக மாற்ற ஒவ்வொரு இந்தியருக்கும் உந்துசக்தியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே தாக்குதல் சம்பவம் நடந்த புல்வாமாவில் ராணுவ அதிகாரிகள் வீரர்கள் உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்

 

Tags :

Share via

More stories