அதிரடி கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் 6 கடைகளுக்கு நோட்டீஸ்

by Staff / 24-09-2023 12:30:02pm
அதிரடி கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் 6 கடைகளுக்கு நோட்டீஸ்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை அறிவுறுத்தலின்படி பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் பல்லடம் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.இந்த ஆய்வின் போது கெட்டுப்போன சிக்கன் 8 கிலோ, சமைத்த சிக்கன் 2 கிலோ, கெட்டுப்போன கிரில் சிக்கன் 5 கிலோ மற்றும் இதர உணவு வகைகள் சுமார் ஒரு கிலோ அளவில் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. சுகாதாரமற்ற முறை யில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்த 4 ஓட்டல்களுக்கு ரூ. 1000 வீதம் ரூ. 4000 அபராதம் விதிக்கப்பட்டது.16 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 6 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவ்வாறான ஆய்வுகள் பல்லடம் தாலுகா முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்று உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.

 

Tags :

Share via