15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை

சேலம் வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கில் 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சேலம் போலீசார் தாக்கல் செய்திருந்தனர். அதன் நகல்கள், குற்றம் சாட்டப்பட்ட 30 பேருக்கும் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டது. குறைந்த முதலீட்டில் அதிக பணம் கிடைக்கும் என 1686 பேரை மோசடி செய்து ₹200 கோடி வரை சுருட்டியதாக வின்ஸ்டார் நிறுவன உரிமையாளர் சிவக்குமார் உள்பட 30 பேர் மீது வழக்கு நடந்து வருகிறது.
Tags :