நாகப்பட்டினத்தில்  பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட  தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி .

by Editor / 28-01-2024 10:37:37pm
நாகப்பட்டினத்தில்  பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட  தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி .

சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்ற  தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி  மதியம் 2.20 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள கீழவெண்மணி பகுதியில் உள்ள தியாகி பழனிவேல் வீட்டிற்கு சென்ற ஆளுநருக்கு அந்தப்பகுதியினர் பூங்கொத்துக்கொடுத்தும் சால்வை அணிவித்து கௌரவித்தும் நலம் விசாரித்து அவருடன் கலந்து உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து 2. 45 மணிக்கு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வழிபாடு . அதனைத் தொடர்ந்து 3. 20 மணிக்கு வெளிப்பாளையம் நம்பியார் நகர் பகுதியில் மக்களை சந்திக்கும் தமிழக ஆளுநர் அங்குள்ள அதிபக்த நாயனார் கோவிலில் சாமி தரிசனம்.

அதனைத் தொடர்ந்து பெருங்கடம்பனூர் பகுதியில் உள்ள ஜீவா நகர் பகுதியில் 3:30 மணிக்கு பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக 4 .20 மணிக்கு நாகை ஆண்டவர் கல்லூரியில் மாணவருடன் கலந்துரையாடிய ஆளுநர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் மாலை 6 மணிக்கு சாமி தரிசனம் செய்தார்.

ஆளுநர் வருகையை முன்னிட்டு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர்  மேற்கொண்டனர். 

ஆளுநருக்கு கருப்புகொடி  காட்டுவதாக அறிவிக்கப்பட்டதால் பாதுகாப்பு பணியில் மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் 13 துணை காவல் கண்காணிப்பாளர்கள் 30 இன்ஸ்பெக்டர்கள் உட்பட தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, ஆகிய 8 மாவட்டங்களில் இருந்து போலீசார் வர வளைக்கப்பட்டு1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஆளுநரோடு சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு,மற்றும் வாசுதேவநல்லூர் ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

 

Tags : நாகப்பட்டினத்தில்  பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட  தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உள்ளார்.

Share via