அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலம் வருகை
சேலம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் அரசு விழா மற்றும் கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கோவையில் இருந்து கார் மூலமாக சேலம் மாவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) மாலை வருகிறார். அமைச்சராக பொறுப்பேற்று முதன் முதலாக சேலத்திற்கு வரும் அவருக்கு சங்ககிரி சின்னாகவுண்டனூர் பைபாஸ் பகுதியில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags :