ஒடிசாவில்ஆரம்ப பள்ளி வகுப்பில் இருந்து முதுகலை பட்டப்படிப்பு வரை முற்றிலும் இலவச கல்வி - முதலமைச்சர் மோகன் சரண் மாஜி

by Admin / 14-06-2026 01:10:01am
 ஒடிசாவில்ஆரம்ப பள்ளி வகுப்பில் இருந்து முதுகலை பட்டப்படிப்பு வரை முற்றிலும் இலவச கல்வி - முதலமைச்சர் மோகன் சரண் மாஜி

ஒடிசா மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இன்று பாஜக அரசு பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒடிசாவில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆரம்ப பள்ளி வகுப்பில் இருந்து முதுகலை பட்டப்படிப்பு வரை முற்றிலும் இலவச கல்வி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏழை எளிய மாணவர்கள் கல்விக்கு அதிகமாக செலவு செய்யப்படும் சூழல்  காரணமாக படிப்பை பாதியில் விட வேண்டியநிலைக்கு தள்ளப்படுவதை தவிர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டம் பெரிய பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் இந்த இலவச கல்வி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படஉள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் வழங்கப்படாத ஆரம்ப நிலையில் இருந்து முதுகலை வரையும் இலவச கல்வியை வழங்கும் மாநிலங்களில் முதல் மாநிலமாக ஓடிஸா மாறி உள்ளது. கல்வித்துறை மேம்படுத்தப்படுவதின் மூலமாக மாணவர்களின் வாழ்க்கை மேம்படும் என்கிற நோக்கத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இதனால்  உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கும் முகமாக மூன்று ஆண்டுகளில் 45 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கவும் நான்கு புதிய பல்கலைக்கழகங்களை தொடங்கவும் ஓடிஸா அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo