திருப்பூரில் இன்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருப்பூரில் இன்று காலை ஒரு பின்னலாடை நிறுவனத்திற்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்று அங்கிருந்த தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இன்று மாலை 5.00 மணி அளவில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவருடன் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவும் கலந்து கொண்டு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்த நிலையில் இன்று முதலமைச்சரின் பிரச்சாரம் நடைபெற உள்ளது.
Tags :



















