காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பொன்னேரியில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம்

by Admin / 18-04-2026 12:29:29pm
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பொன்னேரியில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பொன்னேரியில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்கிறார். தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து அவர் சென்னை விமான நிலையத்தை வந்து அடைந்து 12.40 மணி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை சோளிங்கர் தொகுதிக்கு சென்று காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினத்தை ஆதரித்து மதியம் 1:25 முதல் 2 .10 வரை பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து திருச்சிராப்பள்ளிக்கு செல்லும் அவர் துறையூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம் லெனின் பிரசாத் ஆதரித்து மாலை 4:15 மணி முதல் 5 வரை பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். திங்கட்கிழமையும் மீண்டும் தமிழக வந்து நாங்குநேரி சிறுவைகுண்டம் குளச்சல் ஆகிய தொகுதிகளில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை செய்ய உள்ளார்.

 

Tags :

Share via
Logo