சென்னை பெசன்ட் நகரில் வாகனமில்லா ஞாயிற்றுகிழமை நாளை கடைப்பிடிப்பு

by Editor / 03-09-2022 11:15:57am
சென்னை பெசன்ட் நகரில் வாகனமில்லா ஞாயிற்றுகிழமை  நாளை கடைப்பிடிப்பு

சென்னை பெசன்ட் நகர், 6வது அவென்யூ கிழக்கு பகுதியில் 32வது குறுக்கு தெருவிலிருந்து 3வது பிரதான சாலை சந்திப்பு வரை வாகனமில்லா ஞாயிற்றுக்கிழமை "Car-Free Sunday" நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படுகிறது. செப்.4, 11,18,25, அக் 2,16 மற்றும் 23 ஆகிய நாட்களில் காலை 06.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மேற்கண்ட பகுதியில் தி இந்து மற்றும் சென்னை பெருநகர போகுவரத்து காவல் துறையால் இணைந்து நடத்தப்படும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் பொது மக்களுக்கு இந்த பகுதி பயன்படுத்தப்படும்.

இந்நிகழ்ச்சிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அதன்படி 7வது நிழற்சாலையிலிருந்து 6வது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், 16வது குறுக்குத் தெரு வழியாக 2வது நிழற்சாலையை நோக்கி திருப்பி விடப்படும். 16வது குறுக்குத் தெருவில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கிச் செல்ல வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories