எதிரி நாட்டுடன் மோதுவதைப் போல நினைக்கிறார்கள் - துரைமுருகன்

கர்நாடக அரசு எதிரி நாட்டுடன் மோதுவதைப் போல நினைக்கிறார்கள் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு எதிரி நாட்டுடன் மோதுவதைப் போல நினைக்கிறார்கள். நாளொன்றுக்கு 13,500 கனஅடி நீர் திறக்க கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், கர்நாடகா 2,600 கனஅடி தண்ணீர்தான் திறக்கிறார்கள். இதுவரை இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்ததில்லை. உச்ச நீதிமன்ற விதியை ஒரு மாநில அரசே மதிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றார்.
Tags :