மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவரது மனைவி சித்ரா (35). இவர்கள் இரண்டு மகள்களுடன் திருப்பூர் செல்லம் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவரது மனைவி சித்ரா டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் என அதிக நேரம் செலவழித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அதிக பார்வையாளர்கள் உள்ளதால், சினிமா நண்பர்கள் உதவியுடன் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை கிளம்பி தனியாக வசித்து வந்துள்ளார். சமீபத்தில் திண்டுக்கல் சென்றபோது கணவன் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அமிர்தலிங்கம் மனைவி அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்பு அமிர்தலிங்கம் தலைமறைவானார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான அமிர்தலிங்கத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :