என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது-திருமாவளவன் 

by Editor / 28-08-2024 12:13:19am
என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது-திருமாவளவன் 

மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திபில் தெரிவித்ததாவது:

2003 ஆம் ஆண்டு மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணியில் நானும் பல்லாயிரக்கணக்கான சிறுத்தைகள் கலந்து கொண்ட பேரணியை  குறிப்பிட்ட இடத்தில் காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயற்சித்ததால்  பதட்டம் ஏற்பட்டது.  காவல்துறையினர் தடியடி நடத்தி பேரணியை கலைத்தனர். பேரணியில் பங்கேற்ற என் மீதும் கட்சியினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.  இந்த வழக்கு 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் இன்று நான் ஆஜரானபோது சில கேள்வி எழுப்பினார்கள் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்று விடையளித்து இருக்கிறேன். என் மீது போடப்பட்டது பொய் வழக்கு. 

எங்கள் மீது கிரிமினல் வழக்குகள் எதுவும் இல்லை மக்களுக்காக போராடியது தொடர்பாக   சட்ட ஒழுங்கு பிரச்சனைக்காக போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம். 3.  திருமாவளவனே முதல்வராக வேண்டும் என்று இவிகேஎஸ் இளங்கோவன் பேசியதற்கு நன்றி. 

தலித் அரசியல் பேசுபவர்கள் அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் போன்ற தலைவரின் வழியில் நடக்கின்றவர்கள் முதல்வராக முடியாது அரசியல் களத்தில் ஜாதிய இருக்கம் வெகுவாக இறுகி போய் கிடக்கிறது அதனை எனது பேச்சில் இயல்பாக குறிப்பிட்டேன். இதனை உள்நோக்கத்துடனும் திமுக அரசுக்கு எதிராக பேசியதாக பலர் திரித்து பேசுகிறார்கள்.

கலைஞரின் நூற்றாண்டு நாணயம் வெளியிட்டது மத்திய மாநில அரசு விழா கூட்டணிக்கு சம்பந்தமில்லாதது.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஈழப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று பலர் பேசினர். ஆனால் ஆட்சி மாறி பத்து ஆண்டுகள் ஆன பிறகும் தமிழக மீனவர்கள், ஈழத் தமிழர்களுக்கும் பாதுகாப்பு இல்லை, மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்,மதச்சார்பின்மைக்கு ஊறுவிளையாத வகையில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
 

 

Tags : என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது-திருமாவளவன் 

Share via