சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்ட திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையை தூய்மை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக காவல் துறையினருக்கு உத்தரவிட்டனர்.இதன்படி இன்று தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் ஆகியோர் வழிகாட்டுதல் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அறிவுரையின் படி மாவட்டத்தில் உள்ள 37 காவல் நிலையங்கள்,8 சிறப்பு பிரிவுகள் மற்றும் 5 காவலர் குடியிருப்பு சுற்றுபுறங்களில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மேலும் காவல் நிலையங்களில் உள்ள ஆவணங்களை முறையாக வரிசைப்படுத்தி வைத்தும், நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தியும் சுத்தம் செய்யும் பணியை இன்று மேற்கொண்டனர்.

Tags :