.கடந்த சட்டமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்டவாக்குறுதிகளில் 80 விழுக்காடு நிறைவேற்று உட்பட்டு உள்ளன- திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கனிமொழி

by Admin / 30-03-2026 08:52:39pm
.கடந்த சட்டமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்டவாக்குறுதிகளில் 80 விழுக்காடு நிறைவேற்று உட்பட்டு உள்ளன- திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கனிமொழி

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கனிமொழி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டார் ..கடந்த சட்டமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் சுமார் 80 விழுக்காடு நிறைவேற்று உட்பட்டு உள்ளன மீதமுள்ள 101 வாக்குறுதிகள் மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நிறைவேற்ற இயலவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த தேர்தல் அறிக்கை தமிழக முழுவதும் மாவட்ட ரீதியாக பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் மின்னஞ்சல் வாட்ஸ்அப் மூலம் வந்த 80,000 மேற்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது .இந்த தேர்தல் அறிக்கை உண்மையானதாகவும் நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகளை கொண்டதாகவும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தேர்தலின் கதா நாயகியாக இருக்கும் என்றும் அவர் வர்ணித்துள்ளார் அரசு வழங்கும் மடிக்கணினி போன்ற நலத்திட்டங்களை இலவசங்களாக பார்க்க கூடாது எதிர்காலத்திற்கான முதலீடுகள் என்று அவர் பேசினார் வரும் சட்டமன்ற தேர்தலில் முடிவை பெண் வாக்காளர்களை தீர்மானிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை உடன் வெளிப்படுத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மகளிர் உரிமைத் திட்டத்தில் வழங்கப்படுகின்ற 1000 ரூபாய் நடைமுறைப்படுத்தப்பட்டது அதை மேலும் ஆயிரம் ரூபாய் கூட்டி தேர்தல் வாக்குறுதியாக சொல்லி உள்ளார் .அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் இதுவரை படிக்க வழி படிப்பதற்கு நேரமும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

 

Tags :

Share via

More stories