வீரமணியால் பாதிக்கப்பட்ட 15 சிறுமிகள் அடையாளம் காணப்பட்டதாக தகவல்
ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில், அவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 15 சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சில பாதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ள நிலையில், மேலும் 3 பேர் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க 4 பெண் காவல் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை டிஜிபி அமைத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Tags :













