சித்திரை திருவிழா வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தது.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் மே 12 ஆம் தேதி நடைபெறுகிறது, இந்நிகழ்விற்காக வருடம் தோறும் வைகை அணையில் இருந்து மதுரைக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம், வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சீராக ஓடுவதற்காக நகர் பகுதியில் ஓடும் வைகை ஆற்றை பொதுப்பணித்துறையினர் தூய்மைப்படுத்தி உள்ளனர், 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு இயந்திரங்களைக் கொண்டு முட்புதர்கள் அகற்றப்பட்டு ஆற்றப்படுகை சமப்படுத்தப்பட்டது, சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது, அதன்படி, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது, வைகை அணையில் இருந்து 2 தினங்களுக்கு முன்பாக திறக்கப்பட்ட தண்ணீரானது மதுரை வந்தடைந்தது, வைகை ஆற்றில் கள்ளழகர் இருந்திருக்க கூடிய பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் வந்தடைந்தது. மே 12 ஆம் தேதி காலை வரை வைகை அணையில் இருந்து மதுரைக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : சித்திரை திருவிழா வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தது.