ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்ற டிராக் மீது ரயில் மோதி விபத்து

அமெரிக்காவின் வடக்கு மிசோரி மாகாணத்தில் ஆளில்லா ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரக் மீது பயணிகள் ரயில் மோதி தடம் புரண்டு விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சீககோவிற்கு 85 பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது.மெண்டன் அருகே ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற ட்ரக் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதி தடம் புரண்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :