தாய், 2 மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலை

by Staff / 01-11-2022 03:32:02pm
தாய், 2 மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ. கோவில்பட்டியை சேர்ந்த அய்யனார் ( 40). என்பவர் விவசாய கூலி தொழிலாளியாக உள்ளார்.இவரது மனைவி தனலட்சுமி (38).இவர்களது மகன்கள் ஹரி கிருஷ்ணன்(14), குபேந்திர கிருஷ்ணன் (12). இவர்கள் இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். ஹரிகிருஷ்ணன் 9-ம் வகுப்பும், குபேந்திர கிருஷ்ணன் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக அய்யனார் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அய்யனார் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார்.வீட்டில் தனலட்சுமி தனது 2 மகன்களுடன் இருந்துள்ளார். கணவருடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தனலட்சுமி தற்கொலை செய்துள்ளார்

அதன்படி தனலட்சுமி தனது 2 மகன்களுக்கும் விஷத்தை குடிக்க கொடுத்து விட்டு, தானும் குடித்தார். இதில் அவர்கள் 3 பேரும் இறந்து விட்டனர்.இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த அய்யனார் நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை வெகுநேரமாக தட்டியும் தனலட்சுமி திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அய்யனார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு தனலட்சுமி மற்றும் 2 மகன்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்

இதை கண்டு அய்யனார் அதிர்ச்சி அடைந்து தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த அவர், மீதம் இருந்த விஷத்தை அவர் குடித்து விட்டார்.நள்ளிரவில் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அய்யனார் வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு அய்யனார் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்ததையும், தனலட்சுமி மற்றும் அவரது மகன்கள் பிணமாக கிடந்ததையும் பார்த்துள்ளனர்.

இது குறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உயிருக்கு போராடியவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.அவர் அபாய கட்டத்தை தாண்டிய பின்னரே இதற்கான காரணம் தெரியவரும்.போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via