ஹிந்து கடவுளை அவமதிக்கிறார் : விஜய் ஆண்டனி மீதுபோலீசில் புகார்
ஹிந்து கடவுளை அவமதிக்கிறார் :என விஜய் ஆண்டனி மீது இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.
இந்து மக்கள் கட்சியை சேர்ந்த, மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் வெளியிட்ட அறிக்கை: ஹிந்து கடவுளை அவமதிக்கும் வகையில், காளி படத்தோடு, 'பிச்சைக்காரன் 2' படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
விஜய் ஆண்டனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ஹிந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டு, போஸ்டரை அகற்ற வேண்டும். இல்லையேல் வழக்கு தொடரப்படும்.திரைப்படம் என்ற போர்வையில், ஹிந்து கடவுள்களை அசிங்கப்படுத்தும் விதமாக, மதநல்லிணக்கத்திற்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில், போஸ்டர்கள் வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. ஹிந்து கடவுள்களை பயன்படுத்துவது போல, மற்ற மத கடவுள்களின் படத்தை போட்டு, 'பிச்சைக்காரன் 2' என்ற வார்த்தையை பயன்படுத்தும் துணிவு இருக்கிறதா. இவ்வாறு சோலை கண்ணன் கூறியுள்ளார்.
Tags :