வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் ( BDAC) வெடிகுண்டு தடுப்பு ஆலோசனை கூட்டம்

by Admin / 25-06-2024 11:17:19am
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் ( BDAC) வெடிகுண்டு தடுப்பு ஆலோசனை கூட்டம்

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் ( BDAC) வெடிகுண்டு தடுப்பு ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

மதுரை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது அதில் பைப் வெடிகுண்டு மூலம் மதுரை விமான நிலையத்தை தகர்த்து ஆட்களை கொல்லப் போவதாக கூறப்பட்டிருந்தது மேலும் இதே போல் டெல்லி, மும்பை சென்னை உள்ளிட்ட 40 முக்கிய நகரங்களில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் வெடிகுண்டு வைத்து தகர்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 இதனை அடுத்து மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் மதுரை மேல் நிலைய முதன்மை பாதுகாப்பு அதிகாரி கணேசன் மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் விஸ்வநாதன் மற்றும் அவனியாபுரம் சரக காவல் உதவி ஆணையர் செல்வ குமார்,மற்றும் ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இன்டிகோ உள்ளிட்ட  விமான நிறுவன அதிகாரிகள், மதுரை விமான நிலைய அதிகாரிகள் ஆலோனை கூட்டம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டு மதுரை மாநகர காவல் ஆணையருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மத்திய தொழிற்படை வீரர்கள் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனார்.

 

Tags :

Share via