கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பினராயி விஜயன்

by Admin / 25-08-2021 01:19:14pm
கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பினராயி விஜயன்

பொதுமக்களையும், அவர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

 கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றும் இங்கு 24 ஆயிரத்து 296 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனா நோய் பாதித்த 173 பேர் மரணம் அடைந்தனர். மாநிலம் முழுவதும் பாதிக்கப்படுவோர் சதவிகிதம் 18.04 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. மொகரம் மற்றும் ஓணப்பண்டிகையையொட்டி இந்த ஊரடங்கில் அரசு  தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுகிழமை ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டது.


இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி வருகிற ஞாயிற்றுகிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-

கொரோனா 3-வது அலை பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.  இதனை எதிர்கொள்ள அரசு தயாராகி வருகிறது.

பொதுமக்களையும், அவர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே ஞாயிற்றுகிழமை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. பொதுமக்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.

இதையும் படியுங்கள்... 2022 இறுதிக்குள் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு - விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன்

 

 

Tags :

Share via