ஏடிஎம்.இயந்திரத்தை தள்ளி உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது.

by Editor / 08-11-2023 08:32:51am
ஏடிஎம்.இயந்திரத்தை தள்ளி உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது.

தென்காசி மாவட்டம் தென்காசி இலஞ்சி நடுப்பழக் என்கின்ற பகுதியில் தங்கம் டவர் என்கின்ற வணிக வளாகம் அமைந்துள்ளது இந்த வணிக வளாகத்தில் தனியார் வங்கி உள்ளிட்ட ஏராளமான அலுவலகங்களும் அருகில் பெரிய ஜவுளிக்கடை மற்றும் பிரபலமான தங்க மாளிகை உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி நள்ளிரவு இந்த வணிக வளாகத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் பேங்க் சொந்தமான ஏடிஎம் மையம் அமைந்துள்ளது இந்த ஏடிஎம் மையத்தை ஒருவர் உடைத்து பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் உடைக்க முடியாமல் போகவே ஏடிஎம் இயந்திரத்தை தள்ளி விட்டு சென்றுள்ளார் இதன் தொடர்ச்சியாக காலையில் வங்கி சார்பில் அங்கு சென்று ஏடிஎம் வொர்க் ஆகவில்லை என தகவல் கிடைக்க அங்கு சென்று பார்த்த பொழுது ஏடிஎம் இயந்திரம் கொள்ளை முயற்சிக்கு உட்படுத்தப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி பணியாளர்கள் உடனடியாக தென்காசி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க தென்காசி காவல்துறை  ஆய்வாளர் தலைமையில் போலீசார் ஏடிஎம் மையத்தின் உடைய கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரை காட்சிகளை எடுத்து அந்த நபரை தேடி வந்த நிலையில் இலஞ்சி சாலையிலுள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தபோது ஒருநபர் வந்த வழியே செல்வது தெளிவாகவே தெரியவே அவர் கேரளா மாநில பேரூந்தில் பயணித்ததும் தெரியவரவே  தென்காசி குற்றப்பிரிவு போலீசார் கேரளமாநில போலீசாரின் உதவியோடு   
 தேடுதல் வேட்டையை நடத்திய போது அவன் கொல்லம் பகுதியைச் சார்ந்த ராஜேஷ் என்பது தெரிய வந்ததைத்தொடர்ந்து தென்காசி போலீசார் அவனை கைது செய்து தென்காசிக்கு கொண்டுவந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்..இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதே போன்று கடந்த 6 ஆம் தேதி தென்காசி மார்க்கெட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒருவர் அதனை செயலிழக்க செய்யும் வண்ணம் அந்த பகுதியில் இருந்த வயர்களை அறுத்து விட்டு கேமராக்களை பார்த்தவுடன் தப்பி ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.இந்த செயலில் ஈடுபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று கூறப்ப்டுகிறது. 

தென்காசியில் பல்வேறு மாற்றுப் பணிகளுக்கு போலீசார் அனுப்பப்படுவதால் இரவு நேர ரோந்து பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,தற்போது தீபாவளி பண்டிகை காலமென்பதால் போதிய கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏடிஎம்.இயந்திரத்தை தள்ளி உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது.
 

Tags : தென்காசியில் ஏடிஎம்.இயந்திரத்தை தள்ளி உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது.

Share via

More stories

Logo